Powered By Blogger

Friday, June 28, 2013

மேல் மாடத்து ரோஜா


புகைப்படத்தை பார்த்து ,
உன்னை என் வாழ்க்கை
துணையாக ஏற்றதால் , 
ஆச்சரியம் கொள்ளும் 
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் 
தெரியாது....
உன் புகைப்படத்தை பார்த்து 
என்னுள் பூத்த காதல் ,
மேல் மாடத்து, பூந்தொட்டியில் , 
பூத்த  ரோஜாவை போன்று , 
அழகானது என்று.. 

Tuesday, June 25, 2013

பேருந்தில் குழந்தை


பேருந்தில் குழந்தை 
அம்மு, அழகி ..
கண்ணா, குட்டி..
செல்லம், தங்கம் ..
பட்டு, பாப்பு  என்று
வார்த்தைகளை ,
உச்சரிக்கும் முன்னரே,
மடியில் , தாவி
ஏறியது, பேருந்தில்
அருகில் அமர்ந்திருந்த,
குழந்தை ...

Monday, June 24, 2013

மழைக்கால காதல்


ஆயிரம் குறுஞ்செய்திகள் , 
சொல்லிய காதலை விட ,
மழைக்கால பருவத்தின்,
தேநீர் நேரத்தில், என்னை ,
ரசித்த உன் கண்கள், 
உணர்த்தியது அதிக காதலை...

Tuesday, June 18, 2013

ஒலியின் வலி ...


அதிகாலை சேவல் கூவும் குரல் , 
சூரிய கதிர்களோடு , ஜன்னலில்,
வந்தமரும், குருவிகளின் மெல்லிய சத்தம், 
மொட்டை மாடியில் உரக்க படிக்கும்,
குழந்தைகளின் உற்சாகக்குரல்,
இலங்கை வானொலியின், 
புதிய பாடல்கள், மதிய 
உணவுக்கும், சேர்த்து சமைக்கும், 
அம்மாவின், அம்மியின் ரம்மிய சத்தம், 
இவை அனைத்துமே இன்று, 
கைபேசி அலாரங்களாலும் , 
வீட்டு வாசலுக்கு வரும் பள்ளி 
வாகன ஒலியினாலும் , ..
தொலைகாட்சியின் விளம்பரங்களாலும் , 
மின் அம்மியின் சத்தங்களாலும் ,
மறக்கப்படவோ, மறைக்கப்படவோ ..இல்லை , 
புதைக்கப்பட்டுவிட்டன... 

Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

தந்தையர் தினம்.. , உலகமே கொண்டாடுகிறது..
உங்களை கொண்டாடி வாழ்த்துகள், சொல்ல 
அருகில் நீங்கள் இல்லை. ..
நீங்கள் இவ்வுலகில் இருந்த காலங்களில், 
தந்தையர் தினம், என்கிற வழக்கமே இல்லை,
வருந்துகிறேன் இன்று.. , 
வாழ்த்துக்களும் உரைத்தேன் , காற்றோடு, 
உங்கள் செவிகளை, அடைந்த மகிழ்ச்சியுடன், 
தைரியமாக, வாழ்க்கையை,வாழ 
துவங்கினேன் தந்தையே. ..

Saturday, June 15, 2013

இணைய வலைபதிவுகள்

அன்பின் அறிவூட்டம் ,
எண்ணங்களின் எழுத்தோட்டம் , 
உணர்வுகளின் உயிரூட்டம்,
தமிழின் தேரோட்டம் ,
கனவுகளின் கருத்தோட்டம் ,
காதலின் கற்பனைதோட்டம் ,
கவிதையின், கால ஓட்டம் இணையத்தின் 
வலைபதிவுகள் ..

Friday, June 14, 2013

கணவன் மனைவி

கணவன் மனைவி
ஜெயுமான்

காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய், 
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே 
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும் 
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...

Wednesday, June 12, 2013

மழைகால மேகங்கள்..

அடர்ந்த , மழைகால மேகங்கள் , 
மழையை பொழிவதற்கு முன்பு , 
நீல நிறத்து, சீதையின் ராமனையும், ...
கருமை நிறத்து, ராதையின் கண்ணனையும், 
ஏனோ நினைவு கூறுகின்றன ....



Tuesday, May 28, 2013

என் கவிதை

நான் படிக்காத , பார்க்காத , உணராத ..
கவிதை , 
என் குழந்தை ..

Tuesday, March 19, 2013

தனிமையில் வெறுமை


விளையாடும் சிறுவர்கள்..
தீவிர உடற்பயிற்சியில் நடுத்தர வயது மக்கள் ,
உடலின் நன்மைக்காக , நடை பயிற்சியில்
கவனம் செலுத்தும் பெரியோர்கள் ,
காலை இளம் தென்றல் ..
அதிகாலை சூரியன் ,
என்று .... நிரம்பி வழியும் பூங்காவில் ...
அருகில் நடக்க உன் பாதங்கள் இல்லாமல் ,
என் குரலுக்கு செவி கொடுக்க நீ இல்லாமல் ,
என் மனது மட்டும் வெறுமையாய்..



Saturday, November 17, 2012

பிறிதொரு ஜென்மம் வேண்டும்

பிறிதொரு ஜென்மம் வேண்டும்,
கேட்க மறந்த  பாடல்களை கேட்பதற்கும்,
பழக மறந்த மனிதர்களுடன் உறவாடுவதற்கும் ,
சொல்ல மறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் ,
நண்பர்களுடன் , செலவிடாத நேரங்களை பொக்கிஷபடுத்தவும் ,
பாதியில் முடிந்து போன என் தந்தையின் ஆயுளை நீடிக்கவும் , 
என் அன்பு கணவனிடம் , மறைத்த அன்பினை சொல்லவும் , 
பாதி மாதங்களில் சென்ற என் தங்க மகனை , 
ஒரு ஆண் குழந்தையாக பெற்று வளர்க்க , 
பிறிதொரு ஜென்மம் வேண்டும்........

Saturday, November 3, 2012

கடல்


மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து ,
பின் கரையை தொட்டவுடன் .
அடங்கி விடும் அலைகளை ,

Wednesday, October 24, 2012

முரண் -தாய்மை

குழந்தையின் , முதல் அழுகையை 
சிரித்து , ரசிப்பதும் , 
முதல் சிரிப்பை அழுது 
ரசிப்பதும் , 
தாய்மையில் மட்டுமே ...

Saturday, October 20, 2012

கடவுள்


கடவுள் , எந்த வடிவில் இருப்பார் ?
எந்த மொழியில் பேசுவார் ?
எந்த மொழிக்கு செவி கொடுப்பார் ..
என்பது மட்டும் தெரிந்தால் போதும் ,
என்னுடைய எந்த மொழியையும் 
கேட்பதில்லை அவர் ...

Sunday, October 14, 2012

சந்தோஷம்

கடற்கரையில் நடக்கும்போதும் , 
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் , 
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும் 
வாழ்க்கை , சந்தோஷமாகவே ... 

குழந்தை


கோவிலுக்கு செல்லும்போதும் , 
பேருந்துகளில் பயணிக்கும்போதும் ,
உணவகங்களில் உண்ணும்போதும் ,
பூங்காக்களில் அமரும்போதும் ,
கடற்கரைக்கு செல்லும்போதும், 
நம் மனதின் வலிகள்,
மறக்கப்படுகின்றது , 
ஏதோ ஒரு குழந்தையின் 
சிரிப்பாலும், ஸ்பரிசத்தாலும்...

தமிழ்நாடு