கண்களில் கண்ணீருடனும் , கற்பனைகளோடும் , கனவுகளில் ..
சுமந்தேன் ஐந்து ஆண்டுகள் உன்னை .. மனதில் மகிழ்ச்சியுடனும, மசக்கையோடும், கருவறையில் சுமந்தேன் இரு ஐந்து திங்கள் உன்னை.. செல்ல சிணுங்கல்கள் , அழுகைகள், கள்ள சிரிப்புகள் , தாவி தவழ்ந்தும் , தத்தி நடந்தும் , கண்கொள்ளா அழகுடன் , வலம் வந்த உன்னை என் உலகினில் சுமந்தேன் ஓராண்டு... ஆம், என் தங்க பெண்ணே அகல்யா .. உன்னை சுமந்த அந்த நொடி கடந்து ஆயிற்று .. ஓராண்டு .. |
Saturday, April 4, 2020
அகல்யா
யதார்த்தம்
நாம் இருவர், நமக்கு இருவர் என்ற அறிவிப்பு பலகைகள், நாடெங்கும் ..
முப்பது வருடங்களுக்கு முன்பு ...
நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று மாறின,
இருபது வருடங்களுக்கு முன்பு,
கடவுள் , அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்,
நாமே குழந்தை ,, நமக்கேன் குழந்தை .. என்ற அறிவிப்பு,
பத்து வருடங்களுக்கு முன்பு ,,
இன்று கடவுளின் திருவிளையாடல் , நாடெங்கும் ,
கருவுறுதல் மையங்கள், ...
முப்பது வருடங்களுக்கு முன்பு ...
நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று மாறின,
இருபது வருடங்களுக்கு முன்பு,
கடவுள் , அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்,
நாமே குழந்தை ,, நமக்கேன் குழந்தை .. என்ற அறிவிப்பு,
பத்து வருடங்களுக்கு முன்பு ,,
இன்று கடவுளின் திருவிளையாடல் , நாடெங்கும் ,
கருவுறுதல் மையங்கள், ...
Tuesday, August 16, 2016
பெண் சக்தி

நிர்பயாவை நிர்மூலமாக்கி , நகர வீதியில் எரிந்ததால் ,
முடங்கி விடுவோம் என்று எண்ணினாயோ அரக்கனே,
ஆயிரம் நிர்பயாக்களின் திடம் கொண்டு நிமிர்ந்து நடப்போமடா...
மீனுப்ரியாவின் மரணத்தால் , மனதில் பீதி கொண்டு
வீட்டிற்குள் துவண்டு விடுவோம் என்று எண்ணினாயோ அரக்கனே,
லட்சம் மீனுப்ரியாக்களின் தைரிய முகம் கொண்டு முன்னேறுவோமடா ..
சுவாதியை வீதியில் கொடூர கொலை செய்ததால்,
சுருண்டு வீழ்வோம் என்று எண்ணினாயோ அரக்கனே..
கோடி சுவாதிகளின் சத்துவம் கொண்டு வாழ்வோமடா ..
இவையெல்லாம் கண்டு பெண் பிள்ளைகளை பூட்டி வைப்போம்
என்று எண்ணினாயோ அரக்கனே...
இல்லை .. உன்னை போன்ற அரக்கர்களை
வதம் செய்யும் தெய்வ சக்தியாக வலம் வர செய்வோம் ....
பெண் சக்தி

நிர்பயாவை நிர்மூலமாக்கி , நகர வீதியில் எரிந்ததால் ,
முடங்கி விடுவோம் என்று எண்ணினாயோ அரக்கனே,
ஆயிரம் நிர்பயாக்களின் திடம் கொண்டு நிமிர்ந்து நடப்போமடா...
மீனுப்ரியாவின் மரணத்தால் , மனதில் பீதி கொண்டு
வீட்டிற்குள் துவண்டு விடுவோம் என்று எண்ணினாயோ அரக்கனே,
லட்சம் மீனுப்ரியாக்களின் தைரிய முகம் கொண்டு முன்னேறுவோமடா ..
சுவாதியை வீதியில் கொடூர கொலை செய்ததால்,
சுருண்டு வீழ்வோம் என்று எண்ணினாயோ அரக்கனே..
கோடி சுவாதிகளின் சத்துவம் கொண்டு வாழ்வோமடா ..
இவையெல்லாம் கண்டு பெண் பிள்ளைகளை பூட்டி வைப்போம்
என்று எண்ணினாயோ அரக்கனே...
இல்லை .. உன்னை போன்ற அரக்கர்களை
வதம் செய்யும் தெய்வ சக்தியாக வலம் வர செய்வோம் ....
Saturday, April 23, 2016
நாகரிகம்
அண்ணாச்சி கடையில ,
மளிகை சாமான் வாங்கையில,
கல்லும் மண்ணும் கிடக்குதுனு ,
பள பள மாளிகை கடையில ,
மளிகை சாமான் வாங்கினோம்,
பாலிதீன் பைகளில் பெருமையுடன்
சுமந்து வந்தோம்...
பால்கார அண்ணாச்சி , பால்ல தண்ணீர்
கலந்திருக்காருனு , சொல்லி, சோப்பு நூறை
கலந்த , பாக்கெட் பால் வாங்கி குடிச்சோம்,
கூடைக்கார கிழவி , பூச்சி வந்த கத்திரிகையும்,
வண்டு வந்த மாம்பழமும் , வைச்சுருகான்னு ,
பூச்சி கூட வேண்டாம்னு சொன்ன , காய்கறிகளையும் ,
பழங்களையும், பழமுதிற்சோலைகளில்,
பதவிசாக வாங்கி தின்னோம்,
இன்னைக்கு, அண்ணாச்சியும், கிழவியும்,
வீதியில பார்கையில, " ஏலே மக்கா நல்லா இருக்கியாலே "
என்று கேட்கையிலே , மருந்து கடையில வாங்கின,
மருந்து சாமான எங்க போய் மறைக்க... ??
Thursday, October 30, 2014
Monday, December 9, 2013
Thursday, August 29, 2013
Saturday, August 3, 2013
நட்பு ...
நான் தோல்வியில் துவளும்போழுது , என்னை
தோள் கொடுத்து தாங்கவில்லை ,.. நீ ..
தாங்க இயலாத சோதனைகளை வாழ்வில் சந்திக்கையில் ,
என் சோதனைகளை களையவில்லை .. நீ ..
கண்களில் கண்ணீருடன் நான் தவிக்கும் பொழுது ,
உன் கை விரல்களால் கண்ணீரை துடைக்கவில்லை நீ ..
உறவுகள் அனைத்தும், உதறி சென்ற பொழுது ,
உடன் வரவில்லை நீ ...
மாறாக, நான் துவளும்போழுது , தோள்களில் தட்டி கொடுத்தாய் ,
வெற்றி பெற வைத்தாய் .. நீ
என் சோதனைகளை , சாதனைகளாக மாற்ற கற்று கொடுத்தாய் ,
கடக்க வைத்தாய் நீ ..
என்னை புன்னகை புரிய வைத்து , என் விரல்களால் ,
கண்ணீரை துடைக்க செய்தாய் நீ ..
புது உறவுகளை என் வாழ்வில் ,
பூக்க செய்தாய் நீ ....
நாம் கண்ணீர் சிந்தினாலும் , புன்னகை செய்தாலும் ,
புன்னகையை மட்டுமே பதிலாக , படைக்கும் ,
தெய்வத்தை போன்றவள் நீ .. என் தோழி ...
Tuesday, July 23, 2013
கோவில்,..
சிறு வயதில் பக்தியோடு மட்டுமே, வலம் வந்த கோவிலை,
இன்று உன் கரம் பிடித்து வலம் வருகிறேன், சிறு வெட்கத்தோடும் ,
சிறு காதலோடும் கூடிய பக்தியோடு...
பச்சை பட்டுடுத்தி , மூக்குத்தியின் ஒளி மிளிர, காட்சி கொடுக்கும்
அம்மனை கை கூப்பி தொழுகையில் , கண்களில் ஏனோ கண்ணீர் ..
பக்தியிலா , இல்லை, .. உன் அருகில் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்திலா,
புரியவில்லை ..
சிறுமியாக பெற்றோருடன் அமர்ந்த தெப்பகுள படித்துறை,
அன்று பிரசாதம் அருந்த மட்டுமே பிடிக்கும்..
இன்று உன்னோடு அமர்ந்திருக்கையில் , ரசிக்கிறேன்,
சுற்றியுள்ள காற்றையும் , நம்மோடு அமர்ந்திருக்கும்
ஜோடிகளையும் ..., பொற்றாமரை குளத்தில், தாமரைகளை
தேடும் உன் மலர்ந்த முகத்தையும்..
Friday, June 28, 2013
Tuesday, June 25, 2013
Monday, June 24, 2013
Tuesday, June 18, 2013
ஒலியின் வலி ...
அதிகாலை சேவல் கூவும் குரல் ,
வந்தமரும், குருவிகளின் மெல்லிய சத்தம்,
மொட்டை மாடியில் உரக்க படிக்கும்,
குழந்தைகளின் உற்சாகக்குரல்,
இலங்கை வானொலியின்,
புதிய பாடல்கள், மதிய
உணவுக்கும், சேர்த்து சமைக்கும்,
அம்மாவின், அம்மியின் ரம்மிய சத்தம்,
இவை அனைத்துமே இன்று,
கைபேசி அலாரங்களாலும் ,
வீட்டு வாசலுக்கு வரும் பள்ளி
வாகன ஒலியினாலும் , ..
தொலைகாட்சியின் விளம்பரங்களாலும் ,
மின் அம்மியின் சத்தங்களாலும் ,
மறக்கப்படவோ, மறைக்கப்படவோ ..இல்லை ,
புதைக்கப்பட்டுவிட்டன...
Sunday, June 16, 2013
தந்தையர் தினம்
தந்தையர் தினம்.. , உலகமே கொண்டாடுகிறது..
அருகில் நீங்கள் இல்லை. ..
நீங்கள் இவ்வுலகில் இருந்த காலங்களில்,
தந்தையர் தினம், என்கிற வழக்கமே இல்லை,
வருந்துகிறேன் இன்று.. ,
வாழ்த்துக்களும் உரைத்தேன் , காற்றோடு,
உங்கள் செவிகளை, அடைந்த மகிழ்ச்சியுடன்,
தைரியமாக, வாழ்க்கையை,வாழ
துவங்கினேன் தந்தையே. ..
Saturday, June 15, 2013
Friday, June 14, 2013
கணவன் மனைவி
கணவன் மனைவி
ஜெயுமான்
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...
Wednesday, June 12, 2013
Tuesday, May 28, 2013
Tuesday, March 19, 2013
தனிமையில் வெறுமை
விளையாடும் சிறுவர்கள்..
தீவிர உடற்பயிற்சியில் நடுத்தர வயது மக்கள் ,
உடலின் நன்மைக்காக , நடை பயிற்சியில்
கவனம் செலுத்தும் பெரியோர்கள் ,
காலை இளம் தென்றல் ..
அதிகாலை சூரியன் ,
என்று .... நிரம்பி வழியும் பூங்காவில் ...
அருகில் நடக்க உன் பாதங்கள் இல்லாமல் ,
என் குரலுக்கு செவி கொடுக்க நீ இல்லாமல் ,
என் மனது மட்டும் வெறுமையாய்..
Subscribe to:
Comments (Atom)
